/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் தடியடியால் பரபரப்பு
/
செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் தடியடியால் பரபரப்பு
செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் தடியடியால் பரபரப்பு
செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் போலீசார் தடியடியால் பரபரப்பு
ADDED : செப் 01, 2025 06:57 AM

செஞ்சி : செஞ்சி பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு வைத்திருந்த சிலைகளை நேற்று ஊர்வலமாக எடுத்து சென்று போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் சத்திரத்தெரு, திருவள்ளூவர் தெரு என இரண்டு இடங்களில் ஊர்வலம் நடந்தது. சத்திரத்தெருவில் இருந்து 1:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பா.ஜ., நிர்வாகி கோபிநாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்து முன்னணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் விஷ்ணுராஜன், பா.ஜ., முன்னாள் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
திருவள்ளுவர் தெருவில் இருந்து 2:00 மணிக்கு துவங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் துரைராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட துணை தலைவர் பிரித்விராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 4 சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம் விழுப்புரம் ரோடு, திருவண்ணாமலை ரோடு, தேசூர் பாட்டை, சிங்கவரம் ரோடு, காந்திபஜார் வழியாக கூட்ரோட்டில் முடிந்தது. அங்கிருந்து மரக்காணம் கடலில் விசர்ஜனம் செய்ய சிலைகளை கொண்டு சென்றனர்.
திண்டிவனம் ரோடு, சக்கராபுரம் விநாயகர் கோவிலில், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் மாலை 3:00 மணிக்கு புறப்பட்டது. திண்டிவனம் ரோடு, கூட்ரோடு, பழையசக்கராபுரம் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
4:30 மணியளவில் திண்டிவனம் ரோடு பெட்ரோல் பங்க் எதிரே நீண்டநேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டு நடனமாடி தாமதம் செய்தனர். அதே நேரம் செஞ்சி கூட்ரோட்டில் இந்து முன்னணியினரின் விநாயகர் சிலைகள் அந்த வழியாக செல்ல காத்திருந்தனர்.
எனவே ஊர்வலத்தை தொடரும் படி போலீசார் கேட்டு கொண்டனர். ஆனாலும் அதே இடத்தில் இருந்ததால் எஸ்.பி., சரவணன் தலைமையில் அதிரடிப்படையினர் தடியடி நடத்தி ஊர்வலத்தின் ஒரு பகுதியினரை விரட்டி அடித்தனர்.
மூன்று இளைஞர்களை பிடித்து வந்தனர். மீதம் இருந்த நிர்வாகிகள் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் சங்கராபரணி ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.
மாலை 5:00 மணிக்கு செஞ்சி பி.ஏரி, தேசூர் பாட்டை, பெரியகரம் பகுதியில் பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து பி.ஏரி மற்றும் சங்கராபரணி ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., தினகரன் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார்,
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நான்கு பிரிவாக விநாயகர் சிலை ஊர்வலம் நடந்ததால் நேற்று செஞ்சியில் காலை முதல் பரபரப்பு நிலவியது.