/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை
/
விவசாய பொருட்கள் திருட்டு; வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 24, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் விவசாய நிலத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வி.மருதுார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல், 50; இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைப்பதற்காக அதற்கான பொருட்களை வைத்திருந்தார்.
அதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப் மற்றும் ஆங்கிள்கள் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், ஊரல்கரைமேடைச் சேர்ந்த கிஷோர்குமார், 25; என்பவர் திருடியது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.