/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணியின் போது இறந்த போலீஸ் ஏட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
/
பணியின் போது இறந்த போலீஸ் ஏட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
பணியின் போது இறந்த போலீஸ் ஏட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
பணியின் போது இறந்த போலீஸ் ஏட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
ADDED : மார் 18, 2025 05:31 AM

விழுப்புரம் : கஞ்சா குற்றவாளியை பிடிக்க முயன்றபோது, இறந்த போலீஸ் ஏட்டு உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வளவனுார் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்,40; விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி அதிகாலை, சக போலீசாருடன் ரோந்து சென்றார்.
அப்போது, தொரவி கிராமத்தில், கஞ்சா கடத்தல் நபரை விரட்டி பிடிக்கச் சென்றபோது, மயங்கி விழுந்து நெஞ்சு வலியால் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை அவரது உடல் குமாரகுப்பம் இடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, போலீஸ் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.