/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் திருட்டில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
/
மின்சாரம் திருட்டில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
மின்சாரம் திருட்டில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
மின்சாரம் திருட்டில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
ADDED : நவ 20, 2025 05:36 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்சாரம் திருட்டில் ஈடுபட்டவர் மீது உதவி செயற்பொறியாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சித்தணி கிராமத்தில் தணிக்கை செய்த போது சேகர், 35; என்பவர் தனது வீட்டிற்கு 5150 யூனிட் மின்சாரம் திருடியது தெரியவந்தது.
மேலும் இவர் ஏற்கனவே 2019 ம் ஆண்டு மின் திருட்டில் இதேபோன்று ஈடுபட்டு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
தற்போது திருடிய மின்சாரத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரம் என தெரியவந்தது. இதை அடுத்து உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சேகர் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகிறார்.