/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவல்துறை பறிமுதல் வாகனங்கள் விழுப்புரத்தில் 26ம் தேதி பொதுஏலம்
/
காவல்துறை பறிமுதல் வாகனங்கள் விழுப்புரத்தில் 26ம் தேதி பொதுஏலம்
காவல்துறை பறிமுதல் வாகனங்கள் விழுப்புரத்தில் 26ம் தேதி பொதுஏலம்
காவல்துறை பறிமுதல் வாகனங்கள் விழுப்புரத்தில் 26ம் தேதி பொதுஏலம்
ADDED : டிச 20, 2024 05:01 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 26ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம், காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 19, மூன்று சக்கர வாகனங்கள் 2 , இரண்டு சக்கர வாகனங்கள் 101 உள்ளிட்ட 122 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கு, வரும் 26ம் தேதி காலை 10:00 மணியளவில் பொது ஏலம் நடக்கிறது. ஏலம் கோருவோர் ஏலத் தொகையுடன் விற்பனை வரியும் (ஜி.எஸ்.டி.,) சேர்த்து செலுத்த வேண்டும்.
பொது ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்குள் முன் தொகையாக நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய், இரண்டு சக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் செலுத்தி ரசீது பெற வேண்டும்.
முன்தொகை செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். முன்தொகை ஏலத் தொகையில் கழித்துக் கொள்ளப்படும். ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் அன்றே திருப்பி வழங்கப்படும்.
ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையையும் 7 தினங்களுக்குள் அலுவலகத்தில் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.