sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாவட்ட சாலைகளில் விபத்தைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை!: 90 இடங்களில் பேரிகார்டுகள், 20 வேகத்தடைகள்

/

மாவட்ட சாலைகளில் விபத்தைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை!: 90 இடங்களில் பேரிகார்டுகள், 20 வேகத்தடைகள்

மாவட்ட சாலைகளில் விபத்தைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை!: 90 இடங்களில் பேரிகார்டுகள், 20 வேகத்தடைகள்

மாவட்ட சாலைகளில் விபத்தைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை!: 90 இடங்களில் பேரிகார்டுகள், 20 வேகத்தடைகள்

2


UPDATED : பிப் 17, 2026 02:16 PM

ADDED : பிப் 17, 2026 05:33 AM

Google News

UPDATED : பிப் 17, 2026 02:16 PM ADDED : பிப் 17, 2026 05:33 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டம் அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி - மங்களூர் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் உள்ளன.

இதனால், சில ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் விபத்தில் மாநிலத்தில் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்த விபத்துகள் அதிகளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இச்சாலையில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களை நகாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அப்பகுதிகளில் அந்த இடங்களில் பேரிகார்டுகள், ைஹமாஸ் விளக்குகள், சிக்னல் பிளிங்கர்கள் அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்து அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் 5வது இடத்தில் இருந்த விழுப்புரம் தற்போது விபத்துகள் குறைந்து 11வது இடத்தில் உள்ளது.

மேலும், விழுப்புரம் - செஞ்சி சாலை, திண்டிவனம் - செஞ்சி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் விபத்தை குறைக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, இச்சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களை போலீசார், ஆய்வு செய்தனர். அதில், 90 இடங்கள் விபத்து அதிகளவில் நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டது.

அந்த இடங்களில் விபத்தைக் குறைக்க பேரிகார்டுகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக 150 பேரிகார்டுகள் வாங்கி விபத்து நடக்கும் பகுதிகளில் வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 20 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து விபத்து நடக்கும் பகுதிகளில் சி.சி.டி.வி., பொறுத்தவும் மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் சாலை விபத்துகள் வெகுவாக குறைக்க முடியும் என போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us