ADDED : நவ 01, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தீபாவளி பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
விழுப்புரம் அடுத்த செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்முருகன், 39; கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், விழுப்புரத்தில் பைக் மூலம் ரோந்துப் பணியில் இருந்தார்.
விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலை சென்ற போது, திருவாமாத்துார் சந்திப்பு அருகே, பின்னால் வந்த வாகனம் மோதி விட்டுநிற்காமல் சென்றது.
இதில், தலையில் படுகாயமடைந்த அருள்முருகன் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.