/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்
/
பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்
பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்
பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்
ADDED : ஆக 22, 2025 03:54 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி மாத்துார் கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் வெங்கடேசன்,30; சென்னையில் பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார்.
இவர், விக்கிரவாண்டியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சில ஆண்டுகளாக பழகி வந்தார்.
இந்நிலையில் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அப்பெண், கடந்த ஜூலை, 26 ம் தேதியன்று விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர். நேற்று காலை அவர் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில், வெங்கடேசன் சரணடைந்தார். நீதிபதி சத்தியநாராயணன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.