/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியல் கட்சி விளம்பரங்கள், படங்கள் மூடி மறைப்பு
/
அரசியல் கட்சி விளம்பரங்கள், படங்கள் மூடி மறைப்பு
அரசியல் கட்சி விளம்பரங்கள், படங்கள் மூடி மறைப்பு
அரசியல் கட்சி விளம்பரங்கள், படங்கள் மூடி மறைப்பு
ADDED : மார் 17, 2026 04:56 AM

விழுப்புரம்: சட்டசபை பொதுத்தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையொட்டி, விழுப்புரத்தில் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் பஸ் நிலையங்கள், பொது இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள அரசியல் சார்ந்த விளம்பரங்களை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை மேற்புரத்தில் உள்ள அரசியல் விளம்பரங்கள் மட்டுமின்றி, சுவர்களில் உள்ள அரசியல் கட்சிகள் சார்ந்த விளம்பரங்களையும் அழிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து நடைமுறைகளை பின்பற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் உளுந்துார்பேட்டை பஸ் நிலைய நிழற்கூடத்தில் முதல்வர் ஸ் டாலின் பெயரை மறைப்பதற்காக, நகராட்சி ஊழியர்கள் பெரிய கிரேன் உதவியுடன் துணிகளை கொண்டு மூடி மறைத்தனர்.
மேலும் ராஜிவ்காந்தி சிலை, காமராஜர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலை களை துணிகளை கொண்டு மூடி மறைத்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் நடுவே உள்ள சென்ட்ர் மீடியா தடுப்பு கட்டைகளில் இருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்து அகற்றி னர்.

