/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணிகள் நிழற்குடையில் இருந்த அரசியல் கட்சி பேனர் அகற்றம்
/
பயணிகள் நிழற்குடையில் இருந்த அரசியல் கட்சி பேனர் அகற்றம்
பயணிகள் நிழற்குடையில் இருந்த அரசியல் கட்சி பேனர் அகற்றம்
பயணிகள் நிழற்குடையில் இருந்த அரசியல் கட்சி பேனர் அகற்றம்
ADDED : டிச 19, 2024 06:53 AM

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற் குடையின் முகப்பில், இருந்த அரசியல் கட்சியின் பேனர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற் குடையின் முகப்பில், ஐ.ஜே.கே., சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை அகற்றுவதற்கு ஹைட்ராலிக் பொருத்திய வாகனம், நேற்று காலை 11:00 மணிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனையறிந்த ஐ.கே.கே., வழக்கறிஞர் பிரபு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, நகர அமைப்பு அலுவலர் பிரேம் ஆனந்த் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து பேனர்களையும் அகற்றப்படுவதாக தெரிவித்தார். இங்கு, கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பிறந்த நாளையொட்டி பேனர் வைப்பதற்கு, நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக ஐ.ஜே.கே., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதற்காக நகராட்சி அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய ரசீதை காண்பித்தனர். அதனை ஏற்க மறுத்த நகராட்சி அலுவலர், போலீசார் பாதுகாப்புடன் பேனரை அகற்றும் பணியை துவக்கினார்.
மேலும், அதே நிழற்குடையில் வைத்திருந்த தி.மு.க., மற்றும் ஐ.ஜே.கே.பேனர்களும் அகற்றப்பட்டது.

