/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்
/
ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 02, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

