/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாசு கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம்
/
மாசு கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 12, 2025 04:08 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை, கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், கலெக்டர் பேசுகையில், 'பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிக்கின்றனர்.
இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்கள் உருவாகி, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்' என தெரிவித்தார்.
இதில், டி.ஆர்.ஓ., (நில எடுப்பு) ராஜகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

