ADDED : ஜன 17, 2024 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த அவனம்பட்டு ஜெ.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் பங்கேற்று பேசினார். பள்ளி முதல்வர் பானுமதி வெங்கட் ரமணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அனைத்து அலுவலர்கள், மாணவர்களும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளான நடனம், பேச்சுப்போட்டி, சிலம்பம், இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

