/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கல்
ADDED : ஜன 06, 2026 03:28 AM

விழுப்புரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விழுப்புரம் நகரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களு க்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 3,000 ரூபாய், 1 கிலோ பச்சை அரிசி, சக்கரை, ஒரு முழுநீள கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிகள், விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள 42 வார்டுகளிலும் துவங்கியுள்ளது. ஒரு நாளில் காலை 100 டோக்கன்கள், மதியம் 100 டோக்கன்கள் என மொத்தம் 200 டோக்கன் வழங்க வேண்டும். இந்த பணிகள் முடிந்து வரும் 8ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் முறைப்படி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு, இதில் விடுபட்டோருக்கு 11ம் தேதி முதல் விநியோகிக் கப்படும்.

