/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையில் காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
/
செஞ்சி கோட்டையில் காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
செஞ்சி கோட்டையில் காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
செஞ்சி கோட்டையில் காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 16, 2025 06:41 AM

செஞ்சி: காணும் பொங்கலுக்கு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று(16 ம் தேதி) காணும் பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு செஞ்சி கோட்டைக்கு விழுப்புரம், சென்னை, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு , மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதையொட்டி செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா தலைமையில், செஞ்சி உட்கோட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்திய தொல்லியல் துறையினர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில் தலைமையில் தனியார் செக்யூரிட்டி அலுவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டை டிக்கட் கவுண்ட்டர் பகுதியிலும், உள்ளே சென்று திரும்பி வெரும் வழிகளிலும் இரும்பு பைப்புகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
பல்வேறு இடங்களில் பணி புரியும் தொல்லியல் துறை ஊழியர்களையும், தற்காலிக பணியாளர்களையும் நியமித்துள்ளனர். வாகனங்களை நிறுத்த கூடுதல் பார்க்கிங் பகுதியை உருவாக்கி உள்ளனர்.
பேரூராட்சி சார்பில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளை செய்கின்றனர். நீர் நிலை பகுதியை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கண்காணிக்க உள்ளனர்.
சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் அமைத்து உடனடி முதலுதவிக்கும், சிகிச்சைக்கும் தயார் நிலையில் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சி பஸ்நிலையத்தில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளனர்.

