/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
/
சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : அக் 25, 2025 07:02 AM

திண்டிவனம்: சாலையில் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
திண்டிவனம் மேம்பாலம் கீழ் உள்ள சாலை வழியாக புதுச்சேரி, மரக்காணம் பகுதிகளுக்கு பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், மரக்காணம் சாலையில் உள்ள பள்ளிகளுக்கு தங்களின் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் இந்த சாலை வழியாக தான் அழைத்து செல்கின்றனர்.
இந்த சாலை தற்போது பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
நகரின் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இச்சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

