/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED : அக் 30, 2024 04:26 AM

விழுப்புரம் : பிரதோஷத்தை யொட்டி விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்துது.
அதனையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 4:30 மணிக்கு நந்தி சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் நடந்தது. 5:15 மணிக்கு நந்தி சுவாமிக்கும், மூலவருக்கு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு நந்தி சுவாமி ஆலய உட்பிரகாரம் வலம்வரும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலம்
மயிலம் அடுத்த கொல்லியங்குணத்திலுள்ள சிவன் கோவிலில் நந்திக்கு, நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் சுந்தர விநாயகர், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், செண்டூர், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுநடந்தது.
சங்கராபுரம்
தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கட்டளைதாரர் முத்துக்கருப்பன் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சங்கராபுரம் சங்கரலிங்கேஸ்வரவர் கோவில், மஞ்சபுத்துார், சங்கராபுரம் முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.