/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சோரடியா ஜெயின் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
சோரடியா ஜெயின் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 01, 2025 11:07 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுார் சோரடியா ஜெயின் பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது.
பள்ளி தாளாளர் சேனக்ராஜ் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளி முதல்வர் வினோலியா ராஜகுமாரி வரவேற்றார்.
பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரத்திபா, கோகுல், ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், எறையூர் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. சிலம்ப போட்டியில் நித்யஸ்ரீ, ஜீனைத் ஆகியோர் இரண்டாமிடமும், ஆத்திகா லோஷினி, ஷிபானா ஜோஹ்ரா ஆகியார் மூன்றாமிடமும், செஸ் போட்டியில் தன்சிகாஸ்ரீ, ஹம்சியாபேகம் மூன்றாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை, தாளாளர் சேனக்ராஜ் வழங்கினார். சோரடியா சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராதா நன்றி கூறினார்.