/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி யாகம்
/
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி யாகம்
ADDED : செப் 30, 2024 06:30 AM

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் உலக நன்மை வேண்டி 3 நாள் சிறப்பு யாகம் நடந்தது.
கடந்த 27ம் தேதி முதல் நேற்று 29ம் தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு யாகத்தை சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
நிறைவு நாளான நேற்று, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தர்ராஜ், பா.ஜ., வர்த்தகர் பிரிவு மாநில செயலாளர் கோபிநாத், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர் முனுசாமி, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., திருஞான சம்மந்தம், பசுபதி மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர்.