/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடமாடும் காய்கறி வண்டி ஒன்றிய சேர்மன் வழங்கல்
/
நடமாடும் காய்கறி வண்டி ஒன்றிய சேர்மன் வழங்கல்
ADDED : மார் 04, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேளாண்மை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுகந்தி தலைமை தாங்கினார். தோட்டக்கலைத் துறை அலுவலர் பிரகாஷ் வரவேற்றார்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், நடமாடும் காய்கறி வண்டிகளை 5 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தீபிகா, தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் ராஜேஷ், பிரியங்கா, நடராஜன், பிரபாகரன் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

