/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2025 04:22 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் நண்பரை கத்தியால் குத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த அயனம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்குமார், 31; அதே பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகன்கள் லோகேஷ், 25; ஸ்ரீமன், 23; நண்பர்கள். மூவரும், சில தினங்களுக்கு முன், அதே கிராமத்தில் நடந்த உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில், உணவு பரிமாறும்போது, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏற்பட்ட முன் விரோதத்தில், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த அருள்குமாரை, லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோர் குடிபோதையில் சென்று, கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில், லோகேஷ், ஸ்ரீமன் ஆகிய இருவர் மீதம் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

