/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி பேனர்: 2 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர்: 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் த.வெ.க., மாவட்ட செயலாளர் சுரேஷ் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே அனுமதியின்றி அக்கட்சியினர் பேனர் மற்றும் கொடி கம்பங்களை வைத்திருந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், பேனர் வைத்த த.வெ.க., நிர்வாகிகள் ராஜி, சிவமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

