/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு
/
பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு
பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு
பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு நிதி விடுவிப்பு
ADDED : அக் 07, 2024 07:49 AM
வானுார்: வானுார் தாலுகாவில் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை 18வது தவணையில் 6,920 விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.
பிரதமர் மோடி பங்கேற்று 18வது தவணை தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவித்தார்.
இந்நிகழ்ச்சி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நேரடியாக விவசாயிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் வானூர் வட்டாரத்தில் உள்ள 6,920 விவசாயிகளுக்கு கவுரவ நிதி விடுவிக்கப்படுகிறது என வட்டார வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் தெரிவித்தார்.