/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
/
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : மே 28, 2025 11:50 PM

வானுார்: வானுார் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் அறிவழகன், 35; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் கம்பெனி வேலை விஷயமாக திண்டிவனத்திற்கு சென்றார்.
பின் இரவு 9:30 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில் திரும்பினார்.
ஒழிந்தியாம்பட்டு பாலம் சந்திப்பில் வந்தபோது, ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி சாலையோர ஓடையில் விழுந்தார்.
அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மற்றும் கிளியனுார் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த அறிவழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து அவரது சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.