/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் விடுதிகள், ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
/
தனியார் விடுதிகள், ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
தனியார் விடுதிகள், ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
தனியார் விடுதிகள், ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 15, 2025 11:03 PM

விழுப்புரம்,; கோட்டக்குப்பம் போலீஸ் எல்லை பகுதியில் இயங்கும் தனியார் விடுதிகள், ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோட்டக்குப்பத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார். டி.எஸ்.பி., உமாதேவி முன்னிலை வகித்தார்.
இதில், எஸ்.பி., சரவணன் கூறியதாவது:
சுதந்திர தினம் தொடர் விடுமுறையை கொண்டாட நாட்டின் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரி, தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். அவர்களின் அடையாள அட்டைகளை உடனுக்குடன் போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அறைகளில் சந்தேகப்படும்படி நபர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதிகளில் அறை எடுத்த தங்குவோரின் விபரங்களை முறையாக பதிவேட்டில் பதிய வேண்டும்.
அனைத்து தங்கும் விடுதிகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும். அறையில் தங்குவோர் தடை செய்த போதை பொருட்களை பயன்படுத்தினால் விடுதி உரிமையாளர், மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீச்சல் குளங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். மது அருந்தியோரை நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு எஸ்.பி., சரவணன் கூறினார்.