/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் நன்றி
/
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் நன்றி
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் நன்றி
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் நன்றி
ADDED : டிச 04, 2025 05:53 AM
மயிலம்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அரசகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் ஆணைப்படி, தமிழ்நாட்டில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், கல்வி பயின்று வரும் 25 சதவீத ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், 2023-24, 2024-25 கல்வி ஆண்டிற்கு வழங்க வேண்டிய, கல்வி கட்டணம் ரூ. 875 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தமிழக முதல்வருக்கு, அனைத்து தனியார் பள்ளிகள் சார்பாகவும், ஆர்.டி.இ., கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில், தனியார் பள்ளிகளின் சங்கம் சார்பில், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.