/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மார் 14, 2024 11:24 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9:00 மணிக்கு வேலை வாய்ப்பு மையத்தில் நடக்கிறது.
முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ.., டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த தகுதியுடையோர் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்போரின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் பங்கேற்போர்  தங்களின் அசல், கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விபர குறிப்புகளுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

