/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கெடார் அரசு பள்ளிகளில் பரிசளிப்பு விழா
/
கெடார் அரசு பள்ளிகளில் பரிசளிப்பு விழா
ADDED : ஆக 15, 2025 11:18 PM

விழுப்புரம்,; கெடார் அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கெடார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, சுதந்திர தின விழா நடந்தது. ஊராட்சி தலைவர் இந்திராமணி தலைமை தாங்கினார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கலைமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பொன்முடி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றி வைத்து, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பிரியதர்ஷிணி, சிவப்பிரியா, கீர்த்தி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிரதீபா, புவனேஸ்வரி, பிரீத்திகா ஆகியோரை பாராட்டி, ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் வழங்கினார்.
இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். இப்பள்ளியில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சரவணன், வினோத், சபரீசன், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குமரவேல், கோபிநாத், சுமன் ஆகியோரை பாராட்டி, ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக் குமார் வழங்கினார்.