ADDED : மே 06, 2025 05:23 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் முன்னணி நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
உலகதொழிலாளர் தினம், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடந்தது.
சங்க நிறுவனர் ஜான்பிரிட்டோ தலைமை தாங்கினார். தலைவர் காமராஜ், செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். பொருளாளர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். பொதுத்தேர்வில் சாதித்த 2 மாவட்ட மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தசக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் வளர்மதி பரிசு வழங்கினர். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் செந்தாழை, வனிதா, பெரியநாயகம் உள்ளிட்டோருக்கு, நிர்வாகிகள் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.