/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுாலக வார நிறைவு விழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
நுாலக வார நிறைவு விழா மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : நவ 22, 2024 06:45 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மைய நுாலத்தில் 57வது தேசிய நுாலக வாரவிழா பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) காசிம் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன் வரவேற்றார்.
கண்காணிப்பாளர் வெங்கடேசன், பாரதி சிந்தனை புலம் ஆசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மின்நுால் துலங்கல் குறியீடு (கியூ ஆர் கோட்) அறிமுகம் செய்து, பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
துணை ஆட்சியர் (பயிற்சி) பிரேமி, ரோட்டரி சங்க துணை ஆளுநர் கந்தன் வாழ்த்திப் பேசினர். இதில், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், போட்டி தேர்வர்கள், வாசகர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, நுாலகர்கள் ஆரோக்கியம், புவனேஸ்வரி செய்தனர். மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.