/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல்
/
திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல்
திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல்
திருவள்ளுவர் வெள்ளிவிழா போட்டிகள் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜன 01, 2025 05:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவ சிலை 25ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை யொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவ சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதற்கான வெள்ளிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளுவர், திருக்குறள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை திருக்குறள் விளக்க உரைகள், புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம், மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா, பேச்சு போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில், வென்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பழனி பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். பின், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாக பூங்காவில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள மாதிரி திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு கலெக்டர் பழனி, மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ், தாசில்தார் கனிமொழி, மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) காசீம், மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.