/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கராத்தே சாம்பியன்ஷிப் மாணவர்களுக்கு பரிசு
/
கராத்தே சாம்பியன்ஷிப் மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 15, 2024 06:21 AM
விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார்.
ஜான்டூயி பள்ளி எமர்சன் ராபின், சட்ட ஆலோசகர் துரைசாமி முன்னிலை வகித்தனர்.
போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ரகுராம், சேதுராமன், தினேஷ்குமார், சுவாதி, குருநாதன், ஏழுமலை, முரளிராஜன், ஆனந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.