
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில், கல்வி அறக்கட்டளையின் 24ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.
முதலியார்குப்பத்தில் 2024-2025ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்ரமணியன், (தொடக்க நிலை) அருள், தலைமையாசிரியர் டார்லிங் பெல் ரூபி உட்பட பலர் பங்கேற்றனர்.