/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதில் சிக்கல்
/
பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதில் சிக்கல்
பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதில் சிக்கல்
பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதில் சிக்கல்
ADDED : செப் 19, 2024 11:25 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மீண்டும் தொட்டிக்குள் செல்லும் அவலம் உள்ளது.
விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மேன்ேஹால் நிரம்பி, கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் வடக்குத் தெரு பாதாள சாக்கடை பம்ப் ஹவுஸ் தொட்டியில் சேகரிக்கப்படும், கழிவுநீர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் பெரும்பகுதி கழிவுநீர் மீண்டும் பம்ப் ஹவுஸ் தொட்டியிலேயே கொட்டுகிறது.
கழிவுநீரை வெளியேற்ற மின் மோட்டாரை பல மணி நேரம் இயக்கினாலும் பயனில்லை. பிரச்னை குறித்து நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.