/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியோர்களின் ஆதார் அட்டை மேம்படுத்தும் பணியில் சிக்கல்
/
முதியோர்களின் ஆதார் அட்டை மேம்படுத்தும் பணியில் சிக்கல்
முதியோர்களின் ஆதார் அட்டை மேம்படுத்தும் பணியில் சிக்கல்
முதியோர்களின் ஆதார் அட்டை மேம்படுத்தும் பணியில் சிக்கல்
ADDED : டிச 13, 2024 07:12 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகாவில் முதியோர்கள் ஆதார் அட்டையை மேம்படுத்த முடியாததால் நிவாரண தொகை, ரேஷன் பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆதார் அட்டையை தற்போது, மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேல் உள்ள 80 வயதுடைய முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், தொழுநோயாளிகள் தங்களது கைரேகை, கருவிழி பதிவுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களது கைரேகை தேய்ந்தும், கருவிழி திரைகள் சுருங்கி விட்டதாலும் கம்ப்யூட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் இவர்களுக்கு ரேஷன் கடை மூலம் தமிழக அரசு வழங்கும் வெள்ள நிவாரண தொகை, ரேஷன் பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கலெக்டர், மாற்று நடவடிக்கையாக அங்கீகார சான்று மூலமாக இவர்களுக்கு நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.