/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... ரூ.260 கோடி; 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் பலன்
/
வேளாண் மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... ரூ.260 கோடி; 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் பலன்
வேளாண் மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... ரூ.260 கோடி; 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் பலன்
வேளாண் மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல்... ரூ.260 கோடி; 4 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் பலன்
UPDATED : ஆக 20, 2025 08:06 AM
ADDED : ஆக 19, 2025 11:53 PM

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், அரகண்டநல்லுார், செஞ்சி, திருவெண்ணெய் நல்லுார், விக்கிரவாண்டி, அவலுார்பேட்டை, வளத்தி மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில், மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.
இவற்றின் மூலம், நெல், உளுந்து, மணிலா, எள், கம்பு, பனிப்பயிறு, பருத்தி, மக்காச்சோளம், மிளகாய் மற்றும் பச்சைப்பயிறு ஆகிய வேளாண் விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஏப். 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை, 4 மாதங்களில், விழுப்புரம் கமிட்டியில், 4 ஆயிரத்து 129.46 டன் விளைபொருட்கள், ரூ.15 கோடியே 53 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 8 ஆயிரத்து 832 விவசாயிகள் பயனடைந்தனர்.
அதேபோல திண்டிவனம் கமிட்டியில் 2 ஆயிரத்து 90.48 டன் விளைபொருட்கள், ரூ. 17 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் 6 ஆயிரத்து 687 விவசாயிகள் பயனடைந்தனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில், 32 ஆயிரத்து 69.16 டன் விளைபொருட்கள், ரூ. 69 கோடியே 93 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 21 ஆயிரத்து 308 விவசாயிகள் பயனடைந்தனர்.
அரகண்டநல்லுார் கமிட்டியில், 21 ஆயிரத்து 924.60 டன் விளைபொருட்கள், ரூ. 77 கோடியே 13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 32 ஆயிரத்து 271 விவசாயிகள் பயன்பெற்றனர்.
அவலுார்பேட்டை கமிட்டியில், 15 ஆயிரத்து 986 விவசாயிகள் கொண்டு வந்த, 16 ஆயிரத்து 100.30 டன் விளைபொருட்கள், ரூ. 36 கோடியே 70 லட்சத்திற்கும், விக்கிரவாண்டி கமிட்டியில் 14 ஆயிரத்து 922 விவசாயிகள் கொண்டு வந்த 6 ஆயிரத்து 362.87 டன் விளைபொருட்கள், ரூ. 39 கோடியே 66 லட்சத்திற்கும், திருவெண்ணெய்நல்லுார் கமிட்டியில், 1,024 விவசாயிகள் கொண்டு வந்த 1,832.66 டன் விளைபொருட்கள், ரூ. 3 கோடியே 71 லட்சத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
வளத்தி மாரக்கெட் கமிட்டியில், 166 விவசாயிகள் கொண்டு வந்த 226.61 டன் விளைபொருட்கள், ரூ. 30 லட்சத்து, 95 ஆயிரத்திற்கும், மரக்காணம் கமிட்டிக்கு, 16 விவசாயிகள் கொண்டு வந்த, 11.33 டன் விளைபொருட்கள், ரூ. 6 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் கொள்முதல்செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 மார்க்கெட் கமிட்டிகளில், ஒரு லட்சத்து ஆயிரத்து 212 விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84 ஆயிரத்து 747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ. 260 கோடியே 59 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.