/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் மோதி விபத்து பேராசிரியர், வாலிபர் பலி
/
பைக்குகள் மோதி விபத்து பேராசிரியர், வாலிபர் பலி
ADDED : நவ 16, 2025 02:00 AM
மரக்காணம்: இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் பேராசிரியர் உட்பட 2 பேர் இறந்தனர்.
சென்னை, வண்டலுாரை சேர்ந்தவர் ஸ்ரீசூரியன், 28; கல்லுாரி பேராசிரியர். நேற்று முன்தினம் இரவு, 'என்பீல்டு' பைக்கில் சென்னையில் இருந்து இ.சி.ஆரில் புதுச்சேரி சென்று கொண்டிருந்தார். 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.
மரக்காணம் அடுத்த ரங்கநாதபுரம், கூனிமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன், 26; அரவிந்த், 32; இருவரும் 'டியூக்' பைக்கில் புதுச்சேரியிலிருந்து மரக்காணம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை கிருஷ்ணன் ஓட்டினார். இருவரும், 'ஹெல்மெட்' அணியவில்லை.
நள்ளிரவு, 12:30 மணியளவில் ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே, கிருஷ்ணன் தன் பைக்கை இடது பக்கத்திலிருந்து திடீரென வலதுபுறம் திரு ப்பினார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசூரியன் ஓட்டி வந்த பைக், கிருஷ்ணன் பைக் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ஸ்ரீசூரியன், கிருஷ்ணன் உயிரிழந்தனர். அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறார். மரக்காணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

