ADDED : பிப் 09, 2024 06:13 AM

வானுார்: கொந்தமூர் கிராமத்தில் கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கி, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும். மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து சாகுபடி செய்யயும்படி கேட்டுக் கொண்டார்.
வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், நெல்லுக்கு மார்க்கெட்டில் அதிக விலை கிடைப்பதால் நீர்ப்பாசனம் அதிகம் உள்ள இடங்களில் விவசாயிகள் நெல், எள், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், கொந்தமூர் ஊராட்சி தலைவர் சிவக்குமார், சிறுதானியங்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினார்.
உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன் நன்றி கூறினார்.

