ADDED : அக் 01, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று விக்கிரவாண்டி ஒன்றியம் மேலக்கொந்தை, வி சாலை ஆகிய கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், கடந்த, 2016-17 முதல் 2021-22 வரை நிலுவையில் உள்ள வீடுகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஒன்றிய பொறியாளர்கள் குமரன், நடராஜன், முருகன், ரவீந்திரன் , ஊராட்சி மன்ற தலைவர்கள் சாவித்திரி கவியரசன், சரவணன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.