/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு கூட்டம்
/
மகளிர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு கூட்டம்
ADDED : மார் 29, 2025 04:58 AM
விழுப்புரம்: விழுப்புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் முதல்வர் மருந்தகம் விழிப்புணர்வு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான ஊக்குவிப்பு கூட்டம் நடந்தது.
முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் தரமான மருந்து மற்றும் பொருட்களின் மலிவான விலை குறித்து மக்களிடம் விழுப்புரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, விழுப்புரத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான ஊக்குவிப்பு கூட்டம் நடந்தது.
மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி தலைமை தாங்கி, முதல்வர் மருந்தகம் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து விளக்கினார்.
சரக துணைப் பதிவாளர் பழனி, கள அலுவலர்கள் தமிழ்சிட்டு, வைஜெயந்தி உட்பட சங்க செயலாளர்கள், அரியலுார் திருக்கை, கண்டாச்சிபுரம், அரகண்டநல்லுார், ஆலங்குப்பம், கோணை, புத்தனந்தல் ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க மகளிர் சுயஉதவி குழுக்கள் பங்கேற்றன.