/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
/
வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
ADDED : ஏப் 27, 2025 05:30 AM
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார், மேல்மலையனுார் தாலுகாக்களில் செயல்படுத்தப்படும் வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசுகையில், 'தமிழக அரசு, வளமிகு வட்டார வளர்ச்சியினை உருவாக்கிடும் வகையில், மாநிலம் முழுதும் 50 வட்டாரங்கள் தேர்வு செய்து, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வளம் மிகு வட்டார வளர்ச்சி திட்டம் திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது' என்றார்.
தொடர்ந்து, 2024-25ம் ஆண்டிற்கான மாவட்ட மற்றும் வட்டார வளர்ச்சி குறியீடுகள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்குறியீடுகளின் குறைந்த மதிப்பீடுகளை ஆய்வு செய்து, அக்குறியீடுகளுக்கான 2025-26ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட திட்டக்குழு அலுவலர் நடராஜன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

