/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவிக்கு தொல்லை உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
/
மாணவிக்கு தொல்லை உதவி பேராசிரியருக்கு 'காப்பு'
ADDED : பிப் 09, 2025 01:10 AM

திண்டிவனம்:மாணவியிடம் மொபைல் போனில் பாலியல் ரீதியாக பேசிய உதவிப் பேராசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, இன்ஜினியர் காலனி, ஜெயமூர்த்தி ராஜா நகரைச் சேர்ந்தவர் குமார், 47; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு கல்லுாரியில் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர். இவர், இக்கல்லுாரியில் படிக்கும் 17 வயது மாணவியிடம் மொபைல் போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கல்லுாரி முதல்வரிடம், பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி, கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விசாரித்தது. அதில், குற்றச்சாட்டு நிரூபணமானது. மாணவி புகாரில், திண்டிவனம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர்.

