/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில்லில் சாலை பணிக்கு மரத்தை வெட்ட எதிர்ப்பு
/
ஆரோவில்லில் சாலை பணிக்கு மரத்தை வெட்ட எதிர்ப்பு
ADDED : அக் 23, 2025 06:51 AM

வானுார்: புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள், இடையஞ்சாவடி சாலை வழியாக விசிட்டர் சென்டரில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு வருவது வழக்கம்.
விடுமுறை நாட்களில் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம், விசிட்டர் சென்டரில் இருந்து அரோமா கார்டன் வரை ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு (இடையஞ்சாவடி-குயிலாப்பாளையம் சாலை சந்திப்பு) சாலை அமைத்துள்ளது.
இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இடையஞ்சாவடி- குயிலாப்பாளையம் செல்லும் சாலை சந்திப்பில் நான்கு மரங்கள் உள்ளன. இந்த மரத்தை, நேற்று ஆரோவில் ஊழியர்கள் வெட்டினர். இதற்கு இடையஞ்சாவடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள், ஆரோவில் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் வெட்டக்கூடாது என, கூறியதால் உயரமான மரத்தை மட்டும் வெட்டாமல் ஆரோவில் ஊழியர்கள் திரும்பினர்.