/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுடுகாடு பகுதியில் மின் கம்பம் அமைப்பதை எதிர்த்து மறியல்
/
சுடுகாடு பகுதியில் மின் கம்பம் அமைப்பதை எதிர்த்து மறியல்
சுடுகாடு பகுதியில் மின் கம்பம் அமைப்பதை எதிர்த்து மறியல்
சுடுகாடு பகுதியில் மின் கம்பம் அமைப்பதை எதிர்த்து மறியல்
ADDED : நவ 26, 2024 07:16 AM

கோட்டக்குப்பம்; சுடுகாடு பகுதியில் மின்கம்பம் அமைக்க காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இ.சி.ஆர்., சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பம் நடப்பட்டு, நேற்று மின்கம்பி அமைக்கும் பணி நடந்தது.
சுடுகாடு பகுதியில் மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சுடுகாடு பகுதிக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தரக்கோரியும், கெங்கை நகர் காலனி மக்கள் நேற்று மதியம் 12;15 மணியளவில், கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டு சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் தாசில்தார் பழனி, கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், சுடுகாடு பகுதிக்கு கூடுதல் இடம் கேட்டு மனு அளிக்கும்படி தெரிவித்தனர். அதை ஏற்று 12.45 மணியளவில் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.