/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
/
கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
கூட்டுறவு சங்கத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 21, 2025 05:19 AM

செஞ்சி: சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் டிபாசிட் செய்திருந்த 4.50 கோடி ரூபாய் அளவில் முறைகேடாக நடந்துள்ளது. இதை மீட்டு தரக்கோரி 4 ஆண்டுகளாக டிபாசிட்தாரர்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் உள்ளனர்.
இதை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் நேற்று சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வட்ட துணைத் தலைவர் நரசிம்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகன், மாநில துணைத் தலைவர் குண்ட ரெட்டியார், வட்ட தலைவர் மாதவன், செயலாளர் ஆல்பட் வேளாங்கண்ணி, இணைச் செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் சபாபதி வெங்கடேசன், சரவணன் பங்கேற்றனர்.
முன்னதாக போராட்டக் குழுவினர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து போராட்டம் நடந்த இடம் வரை ஊர்வலமாக சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

