/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்
/
அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்
ADDED : ஏப் 16, 2025 04:18 AM

விழுப்புரம்: வட தமிழகம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சைவ, வைணவ மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். அமைப்பாளர் புஷ்பா பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் பால மணிமாறன், செயலாளர் ராஜா, அமைப்பு செயலாளர் ராமன் ஆகியோர் பேசினர்.
பா.ஜ., மாவட்ட தலைவர்கள் விநாயகம், தர்மராஜ், முன்னாள் தலைவர் கலிவரதன், பொதுச் செயலாளர் எத்திராஜ் உட்பட நிர்வாகிகள் சுகுமார், தியாகராஜன், வடிவேல் பழனி, மகளிரணி சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர். சரவணன் நன்றி கூறினார்.