/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்
ADDED : நவ 19, 2025 06:36 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி, பெரியதச்சூர் பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர், சமூக ஆர்வலர் பிரகாஷ் தலைமையில், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள், வாயில் பகுதியில் நின்று, விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், அடிப்படை வசதியில்லாததை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், பெரிதச்சூர் உள்ளிட்ட 50 கிராம மக்கள், பத்திர பதிவு செய்து வருகின்றனர். தினசரி வரும் பொது மக்கள் அமர்வதற்கு போதிய இடவசதியில்லை, கழிவறை, குடிநீர் வசதியும், வாகனம் நிறுத்துமிடமும் இல்லை.
அலுவலகத்தில் ஜெனரேட்டர் பழுதாகி ஓராண்டுக்கு மேலாக கிடக்கிறது. கம்ப்யூட்டருக்கான இன்வெர்ட்டர், பேட்டரிகள் கடந்த 4 ஆண்டுகளாக செயலிழந்துள்ளது. இதனால், மின்தடை ஏற்பட்டால், இருளில் மூழ்கி கம்ப்யூட்டர் செயல்படாமல், பதிவு பணிகள் பாதிக்கிறது.
இதனை சரி செய்ய வேண்டும் என சார் பதிவாளரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளித்து விட்டு செல்லும்படி அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

