/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிவாரண தொகை கேட்டு காத்திருப்பு போராட்டம்
/
நிவாரண தொகை கேட்டு காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 09, 2024 04:36 AM
செஞ்சி : சோமசமுத்திரம் கிராமத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்காததால் கிராம மக்கள் ரேஷன் கடை முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த கோணை ஊராட்சிக்குட்பட்ட சோமசமுத்திரம் கிராமத்திற்கு வெள்ள நிவாரண தொகை ஒதுக்கப்படவில்லை. சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரண்டு நாட்களாக வெள்ள நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சோமசமுத்திரம் கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு அதே ஊரில் உள்ள ரேஷன் கடை முன் அமர்ந்து கடையை திறக்க விடாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி மண்டல துணை தாசில்தார் மலர்விழி, பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் பேசி நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.