வானுார் : திருவக்கரையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் கிரஷருக்கு, ஊராட்சி நிதியை எடுத்து செலவினம் செய்த நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
வானுார் அடுத்த திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதன் அருகே தனியார் கிரஷர் செயல்பட்டு வருகிறது. தனி நபர் நடத்தி வரும் இந்த கிரஷருக்கு செல்ல ஊராட்சி நிதியை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டுள்ளது
இதனை கண்டித்தும், அதற்கு துணை போன முன்னாள் ஊராட்சி தலைவர் பாஸ்கர் மற்றும் வானுார் பி.டி.ஓ., அலுவலர்கள், ஊராட்சி செயலாளரின் செயல்பாட்டை கண்டித்தும்.
ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் ஊழலை தடுத்து நிறுத்தக்கோரியும் நேற்று திருவக்கரை கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.