/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
/
பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2024 11:13 PM
மயிலம் : மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பணியாற்றி வரும் இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
இதில் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அலுவலகப் பணியாளர்களுக்கு பணிச்சுமைகளை குறைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதில் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அர்ஜுனன் நன்றி கூறினார்.